அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை பதிவு செய்த மாநில கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அங்கிகரித்துள்ளது.
டி.டி.வி.தினகரன் தொடங்கிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை பதிவு செய்யப்பட்ட மாநிலக் கட்சியாக அங்கிகரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் டி.டி.வி.தினகரன் சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் முறையிடப்பட்டது.
டி.டி.வி.தினகரன் சார்பில் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு ஆறு மாதங்கள் ஆகியிருந்த நிலையில், தற்போது அ.ம.மு.கவை பதிவு செய்யப்பட்ட மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.