தீப்பெட்டி ஏற்றி வந்த லாரியில் தீப்பிடித்தது

மதுராந்தகம் அருகே தீப்பெட்டி ஏற்றிக்கொண்டு வந்த லாரி தீப்பிடித்து எரிந்தது.

கோவில்பட்டியிலிருந்து பீஹாருக்கு தீப்பெட்டி ஏற்றிக்கொண்டு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி காஞ்சிபுரம் மாவட்டம் கள்ளபிரான்புரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது தீப்பிடித்து எரிந்தது.

லாரி முழுவதும் தீ பரவியதில் தீப்பெட்டிகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. நீண்ட நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைக்கப் பட்டது.

தீ விபத்தால் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே