புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 90.
ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் 1930ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்த பண்டிட் ஜஸ்ராஜ், 80 ஆண்டுகளுக்கும் மேலாக இசை வாழ்க்கையில் பல்வேறு சாதனைகளை செய்தவர்.
இவர் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இசையை கற்றுக்கொடுத்தார்.
பண்டிட் ஜஸ்ராஜ் பத்மஸ்ரீ, பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷன் போன்ற விருதுகளை பெற்ற பெருமைக்கு உரியவர்.
அமெரிக்காவின் நியூஜெர்சியிலுள்ள தனது மகளின் வீட்டில் மாரடைப்பு காரணமாக அவர் காலமானார்.
பண்டிட் ஜஸ்ராஜின் மறைவுக்கு பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிதின்கட்கரி, இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.



 
							