கூட்டணி குறித்து வி.பி.துரைசாமி கூறியிருப்பது பாஜகவின் அதிகாரப்பூரவ கருத்தாக இருக்காது: அமைச்சர் ஜெயக்குமார்!!

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து அதிமுகவினர் யாரும் கருத்து தெரிவிக்காமல் இருப்பது நல்லது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இதுகுறித்து தற்போது கருத்து கூறுவது ஆரோக்கியமானதாக இருக்காது என தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரிய நேரத்தில் கட்சி மேலிடம் முடிவெடுக்கும் எனக் கூறியுள்ளார்.

“எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும். முதல்வர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிப்பது கட்சியை பலவீனப்படுத்தும். அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்து அல்ல” என விளக்கம் அளித்தார். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சுமூகமான முடிவு எடுக்கப்படும். கட்சி, சின்னத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திப்போம் எனக்கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்,கூட்டணி தொடர்பாக வி.பி.துரைசாமி கூறியிருப்பது பாஜகவின் அதிகாரப்பூரவ கருத்தாக இருக்காது என தெரிவித்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி என தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

பாஜக தேசிய கட்சி என்பதால் பாஜக தலைமையில் தான் கூட்டணி எனக் கூறியுள்ளார். தமிழகத்தில் இனி பாஜக vs திமுக என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுடன் அனுசரித்து செல்பவர்களுடன் தான் கூட்டணி என விபி துரைசாமி தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பேசிய ஜெயக்குமார் வி.பி.துரைசாமி கூறியிருப்பது பாஜகவின் அதிகாரப்பூரவ கருத்தாக இருக்காது. பாஜக தலைவர் எல்.முருகன் கூறுவது தான் அதிகாரப்பூர்வாமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே