சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாட்டை போக்க பிற மாவட்டங்களில் இருந்து பால் கொண்டு வர ஏற்பாடு!

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோயம்பேடு சந்தை மூலமாக கொரோன பரவி வருகிறது.

இந்த சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது.

இதற்கு இடையில் சென்னையில் உள்ள மாதவரம் ஆவின் பால்பண்ணையில் பணிபுரியும் 2 தொழிலாளர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் அந்த பால்பண்ணையில், பேக்கிங் செக்சனில் பணிபுரிந்துள்ளனர்

இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிற நிலையில், 2 தொழிலாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மற்ற தொழிலாளர்கள் வேலைக்கு வர மறுக்கின்றனர். 

இதனால், பால் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் ஆவின் பால் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அதாவது, சென்னையில் ஆவின் தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் சேலம்,விழுப்புரம்,காஞ்சிபுரம் வேலூரில் இருந்து கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே