ரஷ்ய பிரதமர் மிகேல் மிசுஸ்டினுக்கு கொரோனா உறுதி

ரஷ்ய பிரதமர் மிகைல் மஷூஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33 லட்சத்தை கடந்துள்ளது.

ரஷ்யாவில் கொரோனா வைரஸால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகிறார்.

இதன் காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அதிபர் விளாடிமிர் புடின் வீடியோ கான்பிரன்சிங்கில் அவர் பங்கேற்க முடியவில்லை.

ரஷ்யாவின் துணை பிரதமர் ஆன்ட்டரி போலோஸ்வே தற்காலிக பிரதமராக பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே