பொதுமக்களுக்கு வெங்காயம் வழங்கிய விஜய் ரசிகர்கள்..!!

பிகில் படம் வெளியாகி  50 நாட்கள் கடந்திருக்கும் நிலையில் அப்படத்தின் வெற்றியைக் கொண்டாடிய விஜய் ரசிகர்கள்  பொதுமக்களுக்கு இலவசமாக வெங்காயம் வழங்கினர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பிகில் வெளியாகி 50 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில், உலக அளவில் இந்த வருடம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்த படம் என்று அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பொதுமக்களுக்கு இலவசமாக வெங்காயம் வழங்கினர்.

மேலும் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள் வழங்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே