9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி: முதலமைச்சர் அறிவிப்பு!

9,10,11 வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவிப்பு.

இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி 9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளார். 2021-ம் ஆண்டில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி தேர்ச்சி பெற உள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட கல்வி நிலையங்கள் முழுமையாக இப்போதும் செயல்படவில்லை. 9,10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 9 மாதங்களாக ஆன்லைன் பாடங்கள் மூலம் கல்வி பயின்ற மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மிகப்பெரிய சுமையாக அமையலாம் என்று கல்வியாளர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் பொதுத்தேர்வை 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு ரத்து செய்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே