”விஜய் 65 இந்தியாவை அசரவைக்கும்” – விஜய் 65-ல் இணைந்த ஒளிப்பதிவாளர் ட்வீட்

விஜய் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பணியாற்ற உள்ளார். 

‘கோலமாவு கோகிலா’,‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ‘நெல்சன் திலீப்குமார்’ இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். இதற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. நாயகிக்கான தேர்வில் மாளவிகா மோகனன், ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் ‘விஜய் 65’ படத்தின் சண்டை இயக்குநராக அன்பறிவு பணியாற்ற உள்ளார். இந்நிலையில் ”விண்ணைத்தாண்டி வருவாயா, எனை நோக்கி பாயும் தோட்டா, துருவ நட்சத்திரம், ராதே ஷியாம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர்  மனோஜ் பரமஹம்சா விஜய் 65 படத்திற்கு  ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ கூடிய விரைவில் நாடே விரும்பும் உள்ள ஒரு நல்ல மனிதருடன் மற்றொரு பயணத்தை தொடங்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. விட்டுச்சென்ற (நண்பன் திரைப்படம்) இடத்திலிருந்து பணியை தொடங்க ஆவலாக இருக்கிறேன்; #Thalapathy65 இந்தியாவை அசர வைக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே