குறுகிய தூரம் செல்லும் ரயில்களின் கட்டணத்தை உயர்த்தியது ரயில்வே அமைச்சகம்!

ரயில்வே கட்டணம் உயர்வு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில் ரயில்வே அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்துள்ளது

இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியுட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றின் காரணமாக முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளின் கட்டணமும், குறுகிய தூரம் செல்லும் ரயில்களின் கட்டணத்தையும் உயர்த்தியுள்ளோம். கொரோனா தொற்று தீவிரமாக பரவும் இச்சூழலில் தேவையற்ற பயணங்களை தவிர்க்கவே இந்த தற்காலிக கட்டண உயர்வு” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதாரணமாக முன்னர் 25 ரூபாய் உள்ள டிக்கெட் கட்டணம் தற்போது 55 ரூபாயாகவும், 30 ரூபாய் உள்ள டிக்கெட் கட்டணம் தற்போது 60 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் முதல் அலுவலகங்களுக்கு செல்லும் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் குறுகிய தூரம் செல்லும் ரயில்கள் பெரும் உதவியாய் இருந்தது. தற்போது இந்த கட்டண உயர்வு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே