பீகாரில் இடி மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழப்பு – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

பீகாரில் இடி விழுந்ததில் இன்று (வியாழக்கிழமை) 83 பேர் பலியாகியிருப்பதாக அந்த மாநில பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கோபால்கஞ் என்னும் மாவட்டத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என அம்மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

அம்மாநிலம் முழுவதும் 23 மாவட்டங்களில் உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 4லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பிகாரை தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலத்திலும் மின்னல்தாக்கி சிலர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.

ஜூன் 22ஆம் தேதியன்று பிகார் மற்றும் அசாம் மாநிலத்தில் வெல்ல அபாயம் ஏற்படலாம் எனவும், அம்மாநிலங்களில் உள்ள நதிகளின் அளவு அபாயக் கட்டத்தில் உள்ளது எனவும் தேசிய பேரிடம் மேலாண்மை ஆணையம் தெரிவித்திருந்தது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே