#BREAKING : எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில்கள், புறநகர் ரயில்கள் சேவை ஆக.12 ஆம் தேதி வரை ரத்து – ரயில்வே

நாடு முழுவதும் அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் ஆகஸ்ட் 12-ம் தேதி வரை ரத்து என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

எக்ஸ்பிரஸ், மெயில், பயணிகள் ரயில் மற்றும் புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு , நாள் அதிகரித்து வருகிறது.

இதனால் தற்போது ஊரடங்கு பல மாநிலங்களில் அமலில் உள்ளது. பொது போக்கு வரத்துகளையும் மத்திய அரசு நிறுத்தியது.

பின்பு புலம் பெயர் தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் இருந்து கோரிக்கை வந்ததால் , சிறப்பு ரயில் இயங்க மத்திய அரசு அனுமதி அளித்தது.

ஆனால் இதற்கும் பல கட்டுப்பாடிகளை விதித்தது ரயில்வே நிர்வாகம்.

முன் கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும் , காய்ச்சல் , சளி இருக்க கூடாது.

பரிசோதனை செய்த பின்பு தான் அனுமதிக்கப்படும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மேலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ,

நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 12 -ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. 

எக்ஸ்பிரஸ் ரயில், பயணிகள் ரயில், நகர்ப்புற மின்சார ரயில்கள் என அனைத்து சேவைகளும் இந்த கால கட்டத்தில் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக. 12-ம் தேதி வரையிலான பயணத்திற்க்கு முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் ரயில்வே அறிவித்துள்ளது.

சிறப்பு ரயில்கள் மட்டும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே