4 ஆண்டுகளில் 7வது பதக்கம்: வரலாறு படைத்த CRPF-ன் இளம் அதிகாரி!

இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படும்போது, நாட்டில் வீரதீர செயல் புரிவோரை கவுரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்படும்.

இந்த விருதுக்கான பெயர் பட்டியல் விழாவிற்கு முன்னதாக வெளியிடப்படும் நிலையில், இந்த ஆண்டு விருது பெறுபவர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டடுள்ளது.

இந்த பட்டியலில், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த துணை கமாண்டர் நரேஷ் குமார் (35) 7வது முறையாக வீரதீர செயலுக்கான விருது பெற்று வரலாறு படைத்துள்ளார்.

இது குறித்து சி.ஆர்.பி.எப். வெளியிட்டு உள்ள அறிக்கையில், நரேஷ் குமார் தைரியம் நிறைந்த சி.ஆர்.பி.எப். அதிகாரி.

4 வருடங்கள் என்ற குறைந்த காலகட்டத்தில் 7வது முறையாக வீரதீர செயலுக்கான காவலர் விருது பெற்று அவர் வரலாறு படைத்துள்ளார். 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள நரேஷ் குமார், 2016 ல் ஸ்ரீநகரில் நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையின் போது எனது முதல் பதக்கத்தை பெற்றேன்.

இங்கே, நாங்கள் இரண்டு வெளிநாட்டு பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றோம்.

இதேபோல், 2018 ஆம் ஆண்டில், எனக்கு 2 பதக்கங்கள் வழங்கப்பட்டன, அதில் 2 ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதிகளை நாங்கள் கொன்றோம்.

இந்த சண்டை மூன்று நாட்கள் நீடித்தது. கடந்த சுதந்திர தினத்திலும், இந்த ஜனவரி 26 ம் தேதியும் எனக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன, “என்று நரேஷ் தெரிவித்துள்ளார்.

சி.ஆர்.பி.எப். பள்ளத்தாக்கு படை பிரிவை தலைமையேற்று சென்று ஸ்ரீநகரில் பல வெற்றிகளை பதித்துள்ளார் என தெரிவித்து உள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே