மேற்கு வங்க சட்டசபை தேர்தல், எட்டு கட்டங்களாக நடக்கிறது.மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட 11-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

பின்னர் கோல்கட்டா திரும்புவதற்காக அவரது காரில் ஏற முயன்ற போது அடையாளம் தெரியாத சிலர், அவரை தள்ளிவிட்டதாகவும்; இதில் காரில் மோதி கீழே விழுந்த மம்தா பானர்ஜியின் காலில் காயம் ஏற்பட்டதாகவும் டி.வி.சானல்கள் செய்தி வெளியிட்டன.

இடது கால், இடுப்பு, தோள்பட்டை மற்றும் கழுத்து ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட காயத்துடன் கோல்கட்டாவில் எஸ்.எஸ்.கே. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தன.

தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து, தாக்குதல் சம்பவம் குறித்து, நேற்று புகார் அளித்தனர்.

இரண்டு நாள் சிகிச்சை முடிந்த நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்த வீல் சேர் மூலம் வெளியே வந்த மம்தா காரில் புறப்பட்டு சென்றார்.

இச்சம்பவம், நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோல்வி பயத்தால், மக்களின் அனுதாபத்தை பெற, மம்தா நாடகம் ஆடுவதாக பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே