ஊரடங்கில் அவசரப் பயணத்திற்கு அனுமதி பெற 75300 01100

அவசரமாக பயணம் மேற்கொள்வோருக்காக பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண்: 75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க, இந்திய அளவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்திலும் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

எவ்விதமான வாகனப் போக்குவரத்திற்கும் அனுமதி இல்லை. அதே நேரம், சில தவிர்க்க முடியாத அவசர வேலைகளுக்கு இதனால் செல்ல முடியாத இக்கட்டான நிலை, பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.

அவர்களின் துயரை போக்கும் வகையில் பிரத்யேக கட்டுப்பாட்டு அறை எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி, பிரத்யேக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கான 75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

காவல் கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை இருக்கும்.

திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அவசர தேவைக்கான பயணத்துக்கு, இந்த எண்ணை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று செல்லலாம்.

இந்த எண்ணை, சென்னை நகருக்குள் அல்லது மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே செல்ல நேரிட்டால், தொடர்பு கொள்ளலாம்.

மேற்கூறப்பட்ட காரணங்களுக்காக அனுமதிச்சீட்டு கோருபவர்கள் கோரிக்கை கடிதத்துடன் தேவையான அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மேற்படி கட்டுப்பாட்டறையை கண்காணிக்க பெருநகர சென்னை காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு காவல் துணை ஆணையர் தலைமையில் ஒரு தனிப் படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சேவையானது, மேற்குறிப்பிட்டுள்ள அவசர தேவைகளுக்காக மட்டுமே தவிர, சாதாரண தேவைகளுக்கு அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

அவசர உதவி எண். 75300 01100

One thought on “ஊரடங்கில் அவசரப் பயணத்திற்கு அனுமதி பெற 75300 01100

  • Switched off 🙁

    Reply

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே