உலகம் முழுவதும் 192 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
இதுவரை, உலகளவில் 27,352 பேர் உயர்ந்துள்ளனர். 5,94,687 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 1,33,057 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 19 உயிரிழந்துள்ளனர். 918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தினசரி வேலை பார்த்து சம்பாதிக்கும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர்.
முக்கியமாக டெல்லியில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.டெல்லியில் குடியேறி இருக்கும் பிற மாநில மக்கள் தங்கள் வேலையை இழக்கும் நிலைக்கு சென்றுள்ளனர்.
இதனால் டெல்லியில் இருந்து ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறி வருகிறார்கள். தங்கள் குழந்தைகள், மனைவிகளுடன் இளைஞர்கள் பலர் சாரை சாரையாக வெளியேறி வருகிறார்கள்.
முக்கியமாக டெல்லியில் இருந்து உத்தர பிரதேசத்தில் உள்ள தங்கள் சொந்த ஊர் நோக்கி நேற்று மக்கள் படையெடுத்து சென்றனர். உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் டெல்லியில் பணியாற்றி வருகிறார்கள்.
கடந்த இரண்டு நாட்களாக மக்கள் கால் நடையாக பயணம் மேற்கொண்டனர். தினமும் 50 ஆயிரம் பேர் வீதம் இப்படி டெல்லி நோக்கி கால் நடையாக செல்கிறார்கள்.
நேற்று மட்டும் 60 ஆயிரம் பேர் வரை டெல்லியில் இருந்து உத்தர பிரதேசம் நோக்கி கால் நடையாக சென்றனர். இன்றும் மக்கள் பலர் இப்படி சென்றனர்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா என்பது தொடுதல் மூலம் பரவ கூடியது. கொரோனா காரணமாக டெல்லியில் 41 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் மக்கள் இப்படி கூட்டம் கூட்டமாக வெளியே செல்வது பெரிய ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மக்கள் இடையே இதனால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது.
மக்கள் இப்படி ஆபத்தை உணராமல் கூட்டம் கூட்டமாக செல்வது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.