வேளாண் மண்டலமாக அரியலூர் மாவட்டத்தை சேர்க்கப்படாததற்கு விவசாயிகள் கண்டனம்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அரியலூரை இணைக்கவேண்டும் என, அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதில் ஏழு மாவட்டங்களில் ஒன்றாக அரியலூர் மாவட்டமும் இடம் பெற்றிருந்தது.

ஆனால் நேற்று சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதாவில் அரியலூர் மாவட்டம் இடம் பெறவில்லை.

இதனை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திருமானூர், தா.பழூர் பகுதிகளை வேளாண் மண்டலத்திற்குள் இணைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே