கொரோனா தடுப்பு பணிகளுக்காக டாடா குழுமத்தின் சார்பில் 1500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்டளை தலைவர் ரத்தன் டாடா அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முக்கிய பிரமுகர்கள் பலர் மத்திய, மாநில அரசுகளின் நிவாரண நிதிக்கு நிதியுதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகளுக்காக டாடா குழுமத்தின் சார்பில் 1500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்டளை தலைவர் ரத்தன் டாடா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ரத்தன் டாடா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், டாடா அறக்கட்டளைகள் மற்றும் டாடா குழுமம் கடந்த காலங்களில் நாட்டின் பல்வேறு தேவைகளுக்காக உதவ முன்னின்றுள்ளது.
கடந்த காலத்தை விட தற்போதுள்ள நிலை மிக முக்கியமானது.
கொரோனா தடுப்பு பணிகளுக்காக டாடா அறக்கட்டளை சார்பில் 500 கோடி ரூபாய் மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் சார்பில் 1000 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.