கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் , மருத்துவ, சுகாதாரப்பணியாளர்களைத் தாக்கினால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கும் அவசரச்சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
அவசரச்சட்டத்துக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு அனுப்பப்பட்டது.
அவர் இந்த சட்டத்துக்கு அனுமதியளித்த நிலையில் நள்ளிரவு முதல் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததாக அரசு அறிவித்துள்ளது.
இந்த அவசரச்சட்டத்தில் மருத்துவர் மீது தாக்குத் நடத்துவோருக்கு அதிகபட்சமாக 7 ஆண்டு சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களை சிகிச்ைசக்கு அழைத்து வரச்செல்லும் மருத்துவர்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடந்து வந்தன.
சென்னை மருத்துவர் கரோனாவில் இறந்தநிலையில் அவரின் உடலைப் புதைக்கச் சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும் மருத்துவர்கள் மீது எச்சில் துப்புதல்,கல்லெறிதல் சம்பவங்களும் நடந்தன.
இது மருத்துவர்கள் மத்தியில் பெரும் கவலைையயும், அச்சத்தையும் ஏற்படுத்தி போராட்டத்தில் ஈடுடமுடிவுஎடுத்தனர்.
இதில் மத்திய அரசு தலையிட்டு மருத்துவர்களை சமாதானம் செய்து, இந்த அவசரச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது.
1897-ம் ஆண்டு தொற்றுநோய் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, அவசரச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி, மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தினால், அவர்களின் சொத்துக்களை சேதப்படுத்தினால் இழப்பீடும் குற்றவாளிகள் வழங்க நேரிடும்.
மருத்துவர்கள், சுகாதாரப்பிரிவினரிடம் அத்துமீறி நடந்து கொண்டால் 3 மாதம் முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அத்துடன் ரூ.50 ஆயிரம் முதல் ரூ. 2லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்
மருத்துவர்களுக்கு தீவரமான காயத்தை ஏற்படுத்தினால் 6 மாதம் முதல் 7ஆண்டுகள் வரை சிறையும், ரூ. ஒரு லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
மேலும், மருத்துவர்கள், சுகாதாரப்பணியாளர்கள் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினால் சந்தை விலையிலிருந்து இரு மடங்கு குற்றவாளிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் இதை அந்த உள்ளூர் நீதிமன்றம் முடிவு செய்யும்
இந்தக் குற்றங்களை காவல் ஆய்வாளர் அந்தஸ்துக்குகுறைவில்லாத அதிகாரி விசாரித்து 30 நாட்களில் விசாரணையை முடிக்கவேண்டும், நீதிமன்றம் அதிகபட்சம் ஓர் ஆண்டுக்குள் விசாரித்து தண்டனை வழங்கிட வேண்டும்.
தாமதம் ஏற்பட்டால் அதற்குரிய காரணத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவசரச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஏற்கெனவே 7மாநிலங்கள் மருத்துவர்களையும், மருத்துவப்பணியாளர்களையும் பாதுகாக்க சிறப்புச் சட்டம் கொண்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது