#JUSTIN : சென்னை அண்ணா சாலை மூடப்பட்டது…

சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சின்னமலை முதல் பல்லவன் இல்லம் வரை 15 கி.மீ மூடப்பட்டுள்ளது.

அத்துமீறி இந்த சாலையில் வாகனங்களில் சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

தமிழகத்திலேயே சென்னையில் தான் கொரோனா வைரஸ் அதிகம் பேரை பாதித்துள்ளது.

360க்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் 150க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நடமாட்டத்தை குறைப்பதற்காக சின்னமலை முதல் பல்லவன் இல்லம் வரை 15 கிலோ மீட்டர் தூரத்திற்கு அண்ணா சாலை மூடப்பட்டுள்ளது. 

அண்ணா மேம்பாலத்தில் இருந்து வாலாஜா சாலை சிக்னல் வரை முழுமையாக மூடப்பட்டுள்ளது.

அண்ணா சாலையில் மக்கள் அத்துமீறி வாகனங்களில் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் சாலையில் நடமாடும் வாகன எண்ணிக்கை கட்டுபடுத்த இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சமூக பரவலை தடுக்க தமிழக அரசு போக்குவரத்தை முடக்கி உள்ளது.

சென்னை அண்ணாசாலை நகரின் இதயப்பகுதி சாலை என்கிற நிலையில் அந்த சாலையே மூடப்பட்டிருப்பது நகரில பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே