முகக்கவசங்கள் தைக்கும் குடியரசுத் தலைவர் மனைவி..!

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, டெல்லியில் ஆதரவற்றவர்களுக்கு வழங்குவதற்காக குடியரசுத் தலைவரின் மனைவி சவிதா கோவிந்த் முகக்கவசங்களை தைத்து கொடுத்துள்ளார்.

குடியரசுத் தலைவர் எஸ்டேட்டில் அமைந்துள்ள சக்திஹாட் என்ற தையல் பயிற்சி பள்ளிக்குச் சென்ற சவிதா கோவிந்த், முகக்கவசங்களை தைத்தார். 

இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் சவிதா கோவிந்த் சிவப்பு நிற முகக்கவசம் அணிந்து முகக்கவசங்களை தைத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த முகக்கவசங்கள் அனைத்தும் டெல்லியில் உள்ள ஆதரவற்றோர் முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு விநியோகிக்கப்படுவதாக டெல்லி ஷெல்டர் மேம்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில் “அனைவரும் கொரோனாவுக்கு எதிராக போராட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே