வில்சன் குடும்பத்திற்கு மாவட்ட காவல்துறை சார்பில் 7 லட்ச ரூபாய் நிதி

கன்னியாகுமரியில் சுட்டு கொல்லப்பட்ட காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு அம்மாவட்ட காவல்துறை சார்பில் 7 லட்ச ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர்.

இதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில், வில்சன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.

மேலும் திமுக சார்பில் 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்நிலையில், மாவட்டத்தில் உள்ள காவலர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து வில்சனின் குடும்பத்திற்கு, 7 லட்ச ரூபாய் நிதியை வழங்கினர்.

இத்தொகையை குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரும், விசாரணை அதிகாரியுமான ஸ்ரீநாத், ஏடிஎஸ்பி விஜயபாஸ்கர் உள்ளிட்டோர், மார்த்தாண்டத்திலுள்ள வில்சனின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ஏஞ்சல்மேரியிடம் வழங்கினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே