பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி!

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பேரறிவாளனை விடுதலை செய்ய எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைள் குறித்த அறிக்கையை 2 வாரத்தில் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு குறித்து புதிய அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இது குறித்து சிபிஐ இன்று அளித்த பதிலில், பெல்ட் வெடிகுண்டு பற்றி புதிய தகவல்களை திரட்ட முடியவில்லை.

பெல்ட் வெடிகுண்டில் பல வெளிநாட்டு தொடர்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

அது பற்றி வெளிநாடுகளுக்கு சென்று விசாரிக்க பல வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே