3 நாட்களில் ரூ.605 கோடி மது விற்பனை

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்களில் மட்டும் 605கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகியுள்ளது.

பொங்கல் பண்டிகை கடந்த 15ந்தேதி கொண்டாடப்பட்டது.

மறுநாள் திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

கடந்த 14ந்தேதி போகியன்று 178 கோடி ரூபாய்க்கும், 15ந் தேதி பொங்கலன்று 253 கோடி ரூபாய்க்கும், 17ந் தேதி காணும் பொங்கலன்று 174 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் 143 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே