இத்தாலியில் ஒரே நாளில் 600 பேர் பலி …

கொரோனா வைரஸ் தாக்குதலால் நேற்று ஒரே நாளில் மட்டும் இத்தாலியில் 600பேரும், ஸ்பெயினில் 540 பேரும் பலியாகி இருப்பது உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

சீனாவில் தோன்றிய கொரோனா என்ற கொடிய வைரஸ் தற்போது இத்தாலியை மையமாகக் கொண்டு சுழன்று வருகிறது.

வைரஸின் பிறப்பிடமான சீனாவில் கடந்த சில தினங்களாக உயிரிழப்போ, புதியதாக பாதிக்கப்பட்டவர்களோ இல்லாத நிலையில், இத்தாலியில் ஏற்கனவே 4 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த வகையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 600 பேர் பலியாகி உள்ளனர்.

இதற்கு அடுத்தப்படியாக ஸ்பெயின் நாட்டில் ஏற்கனவே 6 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மரணித்திறந்த நிலையில், நேற்று மட்டும் 540 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

இந்த இரு நாடுகளை அடுத்து பிரான்சில் முன்னதாக 3800 இற்கும் அதிகமாக உயிரிழந்த நிலையில் நேற்று 186 பேரும் பலியாகினர்.

இவர்களில் மூன்று பேர் மருத்துவர்கள் தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேபோல் ஈரானில் ஒரே நாளில் 127 பேர்கள் இருப்பது உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

தொடரும் தொற்று பரவலால் தென்னாப்பிரிக்காவில் மூன்று வாரங்களுக்கு நாடு தழுவிய அவசர நிலையை அந்நாடு பிறப்பித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *