தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாகக் காணப்படும் என்றும்; வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசில் ஒட்டி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென்கிழக்கு ,தெற்கு அந்தமான் அருகே வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.வளிமண்டல சுழற்சி இரண்டு நாளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலிபெறும். 

காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறும். இதனால் நெல்லை, தென்காசி, குமரி, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்ட மலைப்பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி ஆனது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாகும்.

இன்றும் நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே