இன்று சட்டப்பேரவை கூடியதும் கொரேனா பாதிப்பு நிவாரணமாக அறிவிப்புகளை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அவை பின்வருமாறு :-

* கொரோனா நிவாரண நிதியாக ரூ.3250 கோடி ஒதுக்கீடு.
* அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும்.
* குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.
* மார்ச் மாதம் ரேஷன் பொருட்களை வாங்காவிட்டால் ஏப்ரல் மாதம் வாங்கிக்கொள்ளலாம்.
* பிற அமைப்புசாரா தொழிலாளர் குடும்பத்திற்கு 10 கிலோ அரிசு, பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும்.

* நடைபாதை வியாபாரிகளுக்கு ரேசன் பொருட்களோடு கூடுதலாக ரூ.2000 வழங்கப்படும்.
* கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
* 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு கூடுதலாக 2 நாள் ஊதியம் வழங்கப்படும்.

* அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.
* நகர முடியாதவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடம் தேடி சுடான உணவு வழங்கப்படும்.
* ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க மாநகராட்சியில் பொது சமையல் கூடம் அமைக்கப்படும்.
* அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் முதியோர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே