தனி அலுவலர் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு..!!

தமிழகத்தில் உள்ளாட்சி தனி அலுவலர் பதவி காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தனி அலுவலர் பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு, புதிதாக உருவான 9 மாவட்டங்களின் ஊராட்சிகளில் தனி அலுவலர்கள் பதவி காலமும் மேலும் 6 மாதம் நீட்டிப்புக்கப்பட்டுள்ளது.

தனி அலுவலர் பதவி காலத்தை டிசம்பர் 31 வரை நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் கே.என் நேரு, கே.ஆர் பெரியகருப்பன் சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தனர்.

ஜூன் 30-ஆம் தேதியுடன் தனி அலுவலர் பதவி காலம் முடிய உள்ள நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

நாளை இந்த சட்ட மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே