இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,817 பேர் குணம்..!!

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியை கடந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாடு முழுவதும் ஒரே நாளில் 19 லட்சத்து ஆயிரத்து 56 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துவரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 50 ஆயிரத்து 848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் இதுவரையிலான 3 கோடியே 28 ஆயிரத்து 709 பேருக்கு கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் புதிதாக 1,358 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், பலியானோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 90 ஆயிரத்து 660-ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், கொரோனா தொற்றில் இருந்து, மேலும் 68 ஆயிரத்து 817 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனவிலிருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 94 ஆயிரத்து 855-ஆக உள்ளது. தற்போது 6,43,194 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 41-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பை விட குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

நேற்று ஒரே நாளில் 54 லட்சத்து 24 ஆயிரத்து 374 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 29 கோடியே 46 லட்சத்து 39 ஆயிரத்து 511 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே