டிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு…

டெல்லியில் டொனால்டு டிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் சுற்றுப்பயணமாக நாளை இந்தியா வருகிறார்.அவருடன் மனைவி மெலானியா, மகள் இவாங்கா, மருமகன் ஜாரட் குஷ்னெர் மற்றும் முக்கிய அதிகாரிகள் வருகை தருகிறார்கள்.

இந்த சுற்றுப்பயணத்தின் போது டிரம்ப்புக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பிரதமர் மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

டிரம்ப்புக்கு அளிக்கப்படும் விருந்தில் பங்கேற்க வருமாறு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகிற 25-ந்தேதி விருந்து நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்துக்கு நாளை பிற்பகல் 12.30 மணிக்கு வருகிறார் டொனால்டு டிரம்ப்.

அவரை பிரதமர் மோடி நேரில் வரவேற்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே