3வது ஒருநாள் போட்டியில் 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி..!!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்களை அடித்தது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 92 ரன்கள் அடித்தார். ஜடேஜா 66 ரன்களும், கேப்டன் விராட் கோலி 63 ரன்களும் அடித்தனர்.

303 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மார்னஸ் லபுசாங்னே 7 ரன்னில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

நடராஜனுக்கு இது முதல் சர்வதேச போட்டியாகும், முதல் போட்டியிலேயே விக்கெட்டை எடுத்து அசத்தினார்.

இதையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஆரான் பின்ச் நிதானமாக விளையாடி 75 ரன்கள் அடித்தார்.

மற்ற வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாற மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 59 ரன்கள் அடித்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகினர்.

இறுதியில் ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளையும், டி நடராஜன் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்திய அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றாலும், தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே