இன்று நடைபெறுகிறது இந்தியா-இலங்கை இடையேயான 2வது டி20 கிரிக்கெட்

இந்தியா – இலங்கை அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி- 20 போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரிலுள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி-20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கவுகாத்தியில் இவ்விரு அணிகளுக்கு எதிரான முதல் டி – 20 போட்டி மழை காரணமாக ஒரு பந்துக்கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் இரண்டாவது டி – 20 போட்டி இன்று நடைபெறுகிறது.

தொடரை கைப்பற்ற மீதமுள்ள 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டுமென்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டி நடைபெறும் இந்தூரில் கடந்த சில தினங்களாகவே மாலையில் பனிப்பொழிவு அதிகமாக பெய்து வருவதால், இது போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே