52 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமித் பங்கல் வெள்ளிப்பதக்கம் வென்றார்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் அமித் பங்கல் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ரஷ்யாவின் ஏகாடரின்பர்க் நகரில், 9 நாடுகள் பங்கேற்ற இப்போட்டியின் 52 கிலோ இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர் அமித் பங்கல் தேர்வு பெற்றார்.

நேற்று நடைபெற்ற போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான உஸ்பெகிஸ்தான் வீரர் சாக்கோபிடின் சைரோவை அவர் எதிர்கொண்டு 0-5 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார்.

இப்போட்டியில் வெற்றிபெறாவிட்டாலும் சைரோவை எதிர்த்து கடைசி வரை அமித் கடுமையாகப் போராடினார்.

உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெறும் முதலாவது இந்திய வீரர் என்ற பெருமையை அமித் பங்கல் பெற்றுள்ளார்.

63 கிலோ எடைப்பிரிவில் மற்றொரு இந்திய வீரரான மணீஷ் கவுசிக் அரையிறுதி வாய்ப்பை இழந்தபோதும், வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே