வலைப்பயிற்சியில் தீயாக ஷாட் ஆடிய இளம் வீரர் ஹரி நிஷாந்த்: கூர்ந்து கவனித்த தோனி!

எதிர்வரும் ஐபிஎல் 2021 சீசனுக்கு ஆயத்தமாகும் வகையில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னை அணிக்காக விளையாட ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள இளம் வீரர் ஹரி நிஷாந்த் வலைப்பயிற்சியின்போது தீயாக ஷாட் ஆடி அசத்தியுள்ளார். அப்போது அவரது ஆட்டதை கேப்டன் தோனி பின்னால் நின்றபடி கூர்ந்து கவனித்துள்ளார்.  

அந்த படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அவர். “கூர்ந்து கவனிப்பவரின் பார்வைக்கு முன்னர் அடித்த ஷாட்” என கேப்ஷனும் போட்டுள்ளார் அவர்

சயத் முஷ்டக் அலி தொடரில் தமிழக அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தார் ஹரி. அதனால் அடிப்படை விலைக்கே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார் அவர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே