சிங்காரச் சென்னை 2.0 திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவை உரையில் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவைத் தோதலுக்கு பிறகு நடைபெறும் 16-வது பேரவையின் முதல் கூட்டத்தை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது, மக்கள் தொகைக்கு ஏற்ப சென்னை மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும்.
சென்னை பெருநகர வெள்ள நீர் மேலாண்மைக்கு தனிக் குழு அமைக்கப்படும்.
மதுரவாயல் – சென்னை துறைமுகம் உயர்மட்ட சாலைத் திட்டம் விரைவுபடுத்தப்படும்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
மக்கள் தொகைக்கு ஏற்ப துணை நகரங்கள்:
பழங்கால கோட்டைகளும், அரண்மனைகளும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பாரம்பரிய சுற்றுலா ஊக்குவிக்கப்படும்
அனைத்து முக்கிய நகரங்களிலும் புறவழிச் சாலைகள் அமைக்கப்படும்.
மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி பேருந்திரள் விரைவு போக்குவரத்து அமைபுக்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்படும்.
பெரிய நகரங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப துணை நகரங்கள் உருவாக்கப்படும் என்று ஆளுநர் கூறினார்.
அத்திக்கடவு – அவிநாசித் திட்டம்:
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது என்று தமிழக அரசு உறுதி பூண்டுள்ளதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார்.
காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்தை விரைவாக செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிதி ஆண்டில் 125 மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆளுநர் கூறினார்.