சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மீதமுள்ள வாரியத் தேர்வுகளுக்கான முழுமையான அட்டவணை இன்று மாலை 5 மணிக்கு வெளியிடும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சனிக்கிழமை அறிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்தப்படும் என்று போக்ரியால் முன்பு அறிவித்திருந்தார்.

மேலும், நாட்டில் 3,000 சிபிஎஸ்இ பள்ளிகள் மதிப்பீட்டு மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும்; அங்கிருந்து 1.5 கோடிக்கும் அதிகமான விடைத்தாள்கள் ஆசிரியர்களுக்கு மதிப்பீடு செய்ய அனுப்பப்படும் என்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் அறிவித்திருந்தார்.

இந்த ஆண்டு முந்தைய முயற்சிகளில் தோல்வியுற்ற 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் / ஆஃப்லைன் தேர்வுகளை நடத்த சிபிஎஸ்இ தனது அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

துன்பமடைந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து பல கேள்விகள் வாரியத்திற்கு வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே