தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழக அரசு உத்தரவு

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 4 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, தொழில் மற்றும் வர்த்தகத்துறையின் கூடுதல் ஆணையராக இருந்த டி.பி.ராஜேஷ், சுற்றுலாத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் துறையின் சிறப்பு செயலாளராக பணியாற்றி வந்த ஏ.சுகந்தி, எழுதுபொருள் மற்றும் அச்சகத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் சக்சேனா, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறையின் கூடுதல் முதன்மைச் செயலராகவும் சுற்றுலாத்துறை ஆணையராக இருந்த அமுதவள்ளி, தமிழக உப்பு நிறுவன மேலாண் இயக்குனராகவும் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே