மழை தொடர்வதாலும், வெள்ள பாதிப்புகளினாலும் தமிழகம் முழுவதும் சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வானிலை நிலவரம் குறித்து அறிந்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிக்கின்றனர்.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கனமழை நின்றாலும், வெள்ளம் தேங்கிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் நாளை (நவ.20) எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என பார்க்கலாம்..

காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே