இளையோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் : இந்திய அணி 7வது முறையாக சாம்பியன்

இளையோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி 7வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெற்று வந்தது. கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின.

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 32.4 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக ஆல்ரவுண்டர் கரண்லால் 37 ரன்களும், கேப்டன் துருவ் ஜுரேல் (Dhruv Jurel) 33 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

101 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோல்வியை தழுவியது. இந்திய அணி தரப்பில் ஷமீம் உசேன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே