சமூக ஊடகங்களில் அவதூறு செய்தால் 3 ஆண்டுகள் சிறை..!!

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களுக்கு 10,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையிலான புதிய சட்டம் ஒன்றை கேரள அரசு இயற்றியுள்ளது.

கேரள மாநிலத்தில் காவல்துறை சட்டப் பிரிவு 118-ல் காவல்துறையினருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் 118 ஏ என்ற பிரிவு புதிதாக இணைத்து அம்மாநில அரசு அவசர சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் படி உள்நோக்கத்துடன் சமுக வலைதளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தினால், அல்லது அவதூறு தகவலை உண்மைத்தன்மை பற்றி ஆராயமல் பரப்பினால் உரிய நபர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் அவதூறு பரப்பிய நபர்களுக்கு 10,000 ரூபாய் அபராதமும் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்படும் என அந்த அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே கேரள அரசின் இந்த அவசர சட்டத்துக்கு காங்கிரஸ் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது பத்திரிக்கை சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் பரிக்கும் செயல் எனவும் விமர்சித்துள்ளன.

ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன், இந்த சட்டம் பத்திரிக்கை நிறுவனங்களுக்கு எதிரானது இல்லை எனவும்; இது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புபவர்களை தடுப்பதற்கான நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே