ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி..!!

தமிழக முதல்வர் தமிழக ஆளுநரை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலானது கட்டுக்குள் வந்துள்ளது.

தமிழக அரசின் பல்வேறு முயற்சிகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு காரணமாக கொரோனா பரவல் குறைந்து, மக்களின் இயல்பு வாழ்க்கை திருப்ப துவங்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்து பருவமழையை தமிழகம் எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திக்கவுள்ளார்.

இன்று மாலை ஆளுநர் மாளிகையில் 5 மணிக்கு இருவரும் சந்திப்பார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பு வழக்கமான சந்திப்பு என்று தெரியப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் கட்டுப்படுத்த நடவடிக்கை மற்றும் வரும் மாதத்தில் மேற்கொள்ளவேண்டிய முயற்சிகள், பருவமழை காலம் பேரிடர் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கலப்படலாம் என தெரியவருகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே