ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம்பிடித்த 26 புதிய இந்திய வார்த்தைகள்…!

ஆக்ஸ்போர்டு அகராதியின் 10-வது பதிப்பில் 26 புதிய இந்திய  வார்த்தைகள் இடம் பிடித்துள்ளன.

புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு அகராதியை இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தொகுத்து வழங்குகிறது.

இந்த அகராதியின் 10-வது பதிப்பு நேற்று வெளியாகி உள்ளது.

இந்த பதிப்பில் 26 புதிய இந்திய ஆங்கில வார்த்தைகள் இடம் பிடித்துள்ளன.

ஆதார், சால், டப்பா, ஹர்தால், ஷாதி உள்ளிட்ட வார்த்தைகளும் ஆக்ஸ்போர்டு அகராதியின் புதிய பதிப்பில் இடம் பெற்றுள்ளன.

பஸ் ஸ்டேண்ட், டீம்டு யுனிவர்சிட்டி, எப்.ஐ.ஆர்., நான்-வெஜ், வீடியோ கிராப் உள்ளிட்ட வார்த்தைகளும் இதில் அடங்கும்.

இந்தியாவில் மட்டுமே புழக்கத்தில் உள்ள 384 ஆங்கில வார்த்தைகள் அகராதியில் இடம் பெற்றுள்ளன. மேலும் 1,000 புதிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே