கே.பி.பி.சாமியின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

உடல்நலக்குறைவால் காலமான முன்னாள் அமைச்சரும், திவொற்றியூர் எம்.எல்.ஏவுமான கே.பி.பி.சாமியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

திமுக மீனவரணி மாநில செயலாளராக பொறுப்பு வகித்து வந்த கே.பி.பி. சாமி, 2006-2011 வரையிலான திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

பின்னர் 2016ல் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

57 வயதான அவர் உடல்நலக்குறைவால் அவதியுற்று வந்த நிலையில் காலமானார்.

அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே