குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்பு

வரும் 26 ஆம் தேதி குடியரசு தின விழாவையொட்டி டெல்லியில் 4 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

17 ஆயிரம் டெல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சீருடை அணியாமல் 2700 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

48 கம்பெனி துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட உள்ளனர்.

குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் இடத்தை சுற்றிலும் 500 எக்ஸ்ரே எந்திரங்கள், ஆயிரம் சிசிடிவி கேமராக்கள், முக அடையாளம் காணும் சாப்ட்வேர் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன.

10 நடமாடும் காவல் கட்டுப்பாட்டு அறைகள், 10 சிசிடிவி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கியில் குறிபார்த்து சுடும் திறன் கொண்ட வீரர்கள் 500 உயரமான கட்டடங்களில் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2 ஆயிரம் போக்குவரத்து காவலர்களும் பணியில் ஈடுபட உள்ளனர்.

இதனிடையே குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கும் பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரா டெல்லி வந்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே