நடிகர் முரளியின் இளைய மகன் திருமண நிச்சயதார்த்தத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்டார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த முரளி கடந்த 2010-ம் ஆண்டு மரணமடைந்தார். அவருக்கு அதர்வா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
தனது தந்தை வழியில் திரைத்துறையில் நடிகராக அதர்வா கால்பதித்த நிலையில், ஆகாஷூக்கு படம் இயக்குவதில் தான் அதிக ஆர்வம் என்று கூறப்படுகிறது.
ஆகாஷ் லயோலா கல்லூரியில் படித்த சமயத்தில் சினேகா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
சினேகா தளபதி 64 படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள்.
ஆகாஷ் – சினேகாவின் காதலுக்கு இரண்டு குடும்பத்தாரும் பச்சைக் கொடி காட்டியதை அடுத்து நேற்று சென்னை நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அவருடன் திரைத்துறையினர் பலரும் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.