ஐஐடி வளாகத்தில், 2 மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக விசாரணை குழு அமைக்க வலியுறுத்தி ஐஐடி வளாகத்தில் 2 மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஐஐடி மாணவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாணவி பாத்திமா மரணம் பற்றி விசாரிக்க வலியுறுத்தி ஜிந்தா பாரதா என்ற மாணவர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜஸ்டின் ஜோசப் மற்றும் மொய்தீன் என்ற இரண்டு மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த 2 மாணவர்கள் சென்னை ஐஐடி நுழைவாயில் முன்பு உட்கார்ந்து இன்று காலை திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

பாத்திமாவின் மரணத்துக்கு நீதி கேட்டு மட்டுமில்லை, மாணவர்களின் பிரச்சினைகள் குறித்தும் வெளிப்படையாக ஆய்வு நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனால் ஐஐடி வளாகத்தில் பரபரப்பு சூழல் நிலவி வருகிறது.

சென்னை ஐஐடியில் எத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை.

ஆனால் 2016 முதல் வெளியான ஊடக செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் 9 பேர் இறந்துள்ளனர்.

இவர்களின் தற்கொலைகளுக்கு வெவ்வேறு காரணம் இருந்தாலும் கூட அடுத்தடுத்த தற்கொலைகள் ஏன் நடக்கிறது? இதை நிரந்தரமாக தடுக்க வேண்டும் என்பதுதான் மாணவர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மக்களின் எண்ணமும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *