2 வயது குழந்தையின் விளையாட்டால் தாய் பலி

பெலாரஸில் 2 வயது குழந்தை தவறுதலாக அழுத்திய பட்டனில் தாயின் உயிரே பறிபோன சம்பவம் நடந்துள்ளது.

யூலியா ஷர்கோ என்ற இளம் பெண், கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தனது 21-வது பிறந்தநாளை தோழிகளோடு கொண்டாடிவிட்டு வீடு திரும்பிய பின், BMW E34 காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த 2 வயது மகளை, கார் கதவைத் திறக்காமல் ஜன்னல் வழியாகத் தூக்க முற்பட்டார்.

அப்போது குழந்தை எதார்த்தமாக தானியங்கி சாளர அடைப்பானுக்கான பட்டனை அழுத்தியதால் யூலியாவின் கழுத்து அதில் சிக்கிக் கொண்டது.

வெகு நேரமாகியும் காணவில்லை என அவரது கணவர் வெளியே வந்து பார்த்தபோது, யூலியின் கழுத்து காரின் ஜன்னலில் சிக்கி அவர் மயங்கிக் கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

ஜன்னல் கதவை உடைத்து தனது மனைவியை மீட்ட கணவர், அவசர உதவி எண்ணை அழைத்து மருத்துவமனையில் சேர்த்தார்.

நினைவு திரும்பாமல் ஒரு வாரம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார் யூலி. மூளைக்கான ஆக்சிஜன் தடைபட்டதால், அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்துக்குப் பின் பரிதாபமாக உயிரிழந்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே