மூன்று ஸ்கிரீனுடன் சாம்சங் கேலக்ஸி இசட் போல்டு 3

சாம்சங் பல்வேறு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உருவாக்கி வருவதாக தெரிகிறது.

அதன்படி சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டூயல் ஹின்ஜ் மற்றும் ஸ்லைடிங் கீபோர்டு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

புதிய தகவல்களின் படி புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் முந்தைய கேலக்ஸி போல்டு 2 போன்ற தோற்றம் கொண்டிருக்கும்.

கூடுதலாக ஸ்லைடிங் கீபோர்டு வழங்கப்படும் என கூறப்படுகிறது. சாம்சங் விண்ணப்பத்தில் மொத்தம் எட்டு வரைபடங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

மொத்தத்தில் இது கேலக்ஸி இசட் போல்டு 2 தோற்றத்தில் கூடுதலாக ஒரு ஸ்கிரீன் மட்டும் வழங்கப்பட்டு இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே