பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், 18 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
நீலகிரி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணத்தினால், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நேற்று திடீர் என்று நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் காலையில் அணைக்கு வரும் நீர்வரத்து 18 ஆயிரத்து 292 கன அடி நீராக குறைந்துள்ள நிலையில், அந்த நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் தாமிரபரணியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால், ஸ்ரீவைகுண்டம் அணை நிரம்பி அங்கிருந்து விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.