16வது சிஐடியு அகில இந்திய மாநாடு நிறைவுபெற்றது…

சென்னையில் 5 நாட்களாக நடைபெற்று வந்த சிஐடியு அமைப்பின் 16வது அகில இந்திய மாநாடு நிறைவுபெற்றது. 

சென்னையில் கடந்த 23ம் தேதி தொடங்கிய சிஐடியு அமைப்பின் அகில இந்திய மாநாட்டில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டார்.

மாநாட்டின் நிறைவாக சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம் வரை பேரணி நடைபெற்றது.

இதில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சிஐடியு அமைப்பினர் முழக்கம் எழுப்பினர்.

பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மாநில தலைவர் சௌந்தரராஜன், தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் செயல்பட்டுகொண்டிருப்பதாக கடுமையாக குற்றம்சாட்டினார். 

சிஐடியு மாநாட்டில், உலக தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் மிக்கேல், அகில இந்திய தலைவர் ஹேமலதா, மாநில தலைவர் சௌந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே